கால்வாயில் குதித்து தப்ப முயன்று சிக்கிய ஆடவர்

கால்வாயில் குதித்து தப்ப முயன்று சிக்கிய ஆடவர்

2 mins read
3dedd163-020e-4637-9f05-5c16fb0b48fa
-

ஓஃபிர் ரோட்டில் இருக்கும் லூர்துமாதா தேவாலயத்திற்குச் சென்றவர்களை அலைக்கழித்ததாகக் கூறப்பட்டதன் தொடர்பில் சனிக்கிழமையன்று 26 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் கைதுசெய்தது. அந்த தேவாலயத்தில் இருந்த சில மாதர்களை அணுகி அவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டு அவர்களை அந்த ஆடவர் சங்கடத்திற்கு உள்ளாக்கி னார் என்பது தெரியவந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. அந்த மாதர்களில் ஒருவர் அதிர்ச்சி அடைந்து தேவாலயத்தைவிட்டு ஓடிவிட்ட தாகவும் அந்த ஆடவர் அந்த மாதைப் பின்தொடர்ந்து கொஞ்ச தூரம் ஓடினார் என்பதும் தெரியவந்துள்ளது.

போலிஸ் வந்துகொண்டிருந்தது தெரிந் ததும் போலிசிடமிருந்து தப்பிக்க முயன்ற அந்த ஆடவர் ரோச்சோர் கால்வாயில் குதித்து நீந்தினார். அவரைப் பின்தொடர்ந்த போலிஸ் அதிகாரி ஒருவர் கால்வாயில் குதித்து பிடித்தார். இதனிடையே, உதவி கேட்டு தங்களுக்கு அன்று பிற்பகல் சுமார் 1.30 மணிக்குத் தகவல் வந்ததாக போலிஸ் தெரிவித்தது. கைதான ஆடவர் சுயநினை வுடன் டான் டோக் செங் மருத்துவமனைக் குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலிஸ் மேலும் குறிப்பிட்டது. அரசாங்க ஊழியருக்கு எதிராக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது, பொது இடத்தில் வேண்டுமென்றே பலரையும் சங்கடப்படுத்தியது, குடிபோதையில் இருந் தது ஆகியவற்றுக்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தெரி வித்துள்ளது.

ரோச்சோர் கால்வாயில் ஆடவரும் போலிஸ் அதிகாரியும் இருந்ததைக் காட்டும் காணொளி 'வாட்ஸ்அப்'பில் வலம் வந்தது. இந்த ஆடவர் தோள்பட்டை அளவு நீரில் போலிஸ் அதிகாரியிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதையும் அவரை மடக்கி அதிகாரி கரைக்குக் கொண்டுவர முயன்றதையும் காணொளி காட்டியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்