நான்காம் தலைமுறை அமைச்சர்களின் வாராந்தர தொகுதிச் சுற்றுலா

நான்காம் தலைமுறை அமைச்சர்களின் வாராந்தர தொகுதிச் சுற்றுலா

1 mins read
81b95584-466c-4dda-be74-4c29c488ffda
-

நான்காம் தலைமுறைத் தலைவர் கள் வாரந்தோறும் தொகுதி வருகை மேற்கொண்டு வருகின் றனர். அந்த வகையில் நேற்றுக் காலை நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், கல்வி அமைச்சர் ஓங் யி காங், தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் ஆகியோர் செங்காங் சவுத் தொகுதியில் உள்ள ஹவ்காங் வில்லேஜ் எனும் இடத்துக்குச் சென்று அங்குள்ள குடியிருப்பாளர்களைச் சந்தித்து உரையாடினர். அத்தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பினர் திரு கான் தியாம் போ அவர்களுடன் சென் றிருந்தார்.

இந்தச் சந்திப்பின்மூலம் கல் வித் துறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி அவர்களுடன் பேச தமக்கு வாய்ப்பு கிடைத்ததா கவும் புதிய மாற்றங்கள் குறித்து பெற்றோர்கள் மனநிறைவு தெரி வித்தனர் என்றும் கல்வி அமைச் சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், கல்வி அமைச்சர் ஓங் யி காங், தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போ ஆகியோர் நேற்றுக் காலை ஹவ்காங் வில்லேஜுக்கு வருகை புரிந்தனர். படம்: ஓங் யி காங் ஃபேஸ்புக்