நாடாளுமன்றத்துக்கு நியமன உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றி ருக்கும் ஒன்பது பேர் நேற்று நாடா ளுமன்றத்தில் தங்கள் பதவிப் பிர மாணத்தை எடுத்துக்கொண்டனர். உடற்குறையுள்ள நீச்சல் வீராங் கனை யிப் பின் சியூ, சாக்கே ஹோல்டிங்ஸ் நிறுவனத் தலைவர் திரு டக்லஸ் ஃபூ பியாவ் யோங், சிங்கப்பூர் சீன பல்லிய இசைக் குழுவின் தலைமை இயக்குநர் திரு ஹோ வீ சான், பேராசிரியர் லிம் சுன் சன், 'ரோசஸ் ஆஃப் பீஸ்' குழுவின் நிறுவனர் திரு அப்பாஸ் அலி முகம்மது இர்ஷாத், சமூக தொழில்முனைவர் ஓங் லே தெங், சிங்கப்பூர் மருந்தியல் சங் கத் தலைவர் ஐரீன் கீ சியூ சிங், இணைப் பேராசிரியர் வால்டர் எட்கர் தெசேரா, தொழிற்சங்கத் தலைவர் திரு அரசு துரைசாமி, ஆகியோரே அந்த ஒன்பது பேர்.
இவர்களில் இருவரான பேராசி ரியர் தெசேராவும் திரு முகம்மது இர்ஷாத்தும் நேற்று தங்கள் முத லாவது நாடாளுமன்ற உரையை நிகழ்த்தினர்.
நாடாளுமன்றத் தேர்தல் திருத்த மசோதா பற்றி பேசிய பேராசிரியர் தெசேரா, தேர்தல் தொகுதி எல்லைகளின் வரைபடம் இணையத்தில் வெளியிடப்படலாம் அல்லது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படலாம் என்று யோசனை தெரிவித்தார். எரிவாயு திருத்த மசோதா பற்றி பேசிய திரு இர்ஷாத், எரி சக்தி பாதுகாப்பு, எரிசக்தி ஆற்றல்கள், எரிசக்தி மீள்திறன் ஆகிய மூன்று அம்சங்கள் தொடர்பில் உரையாற்றினார். இந்தப் புதிய ஒன்பது உறுப் பினர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

