கப்பலில் வந்து இறங்கிய புதிய ரயில் பெட்டிகள்

கப்பலில் வந்து இறங்கிய புதிய ரயில் பெட்டிகள்

1 mins read
9ea069a4-91ed-4399-8110-fe61a2a8abfc
-

அடுத்த ஆண்டில் தொடங்கப் படும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி சேவை திட்டத்தின் பணிகள் நிர்ணயித்தபடி நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தச் சேவை யில் பயன்படுத்தப்படும் இரண்டு ரயில் பெட்டிகள் நேற்று கப்பலில் ஜூரோங் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. புதிய ரயில் பெட்டிகள் இறக்கப் பட்டு பணிமனைக்குக் கொண்டு செல்லப்படுவதை அங்கு வந்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேரில் பார்வையிட்டார். புதிய ரயில் பெட்டிகள் சோதனையிடப்பட்டு பின்னர் மண் டாய் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டது. கடந்த மே மாதம் சிங்கப் பூருக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு புதிய ரயில் பெட்டிகள் தற்போது மண்டாய் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் நாடாளு மன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துபூர்வ மாக பதிலளித்த உள்கட்டமைப் புக்கான ஒருங்கிணைப்பு அமைச் சருமான கோ பூன் வான், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தின் கட்டுமான வேலைகள், மின் விநியோகம், இயந்திரவியல் உள்ளிட்ட பெரும் பாலான பணிகள் முடிந்துவிட்டதாக தெரி வித்தார்.

கப்பலிலிருந்து ரயில் பெட்டிகள் இறக்கப்படுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்