வங்கியை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு

1 mins read
7004f8e9-f088-4681-aa95-2c885d0cf852
-

சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட் டர்ட் வங்கியிலிருந்து கிட்டத்தட்ட அரை மில்லியன் வெள்ளியை அச்சுறுத்திப் பறிக்க முயன்றதாக இந்திய நாட்டவர் ஒருவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. நாகராஜன் பாலாஜி, 35, எனப்படும் அவருக்கு எதிரான இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரையி லான சிறைத் தண்டனையும் பிரம் படிகளும் தண்டனையாக விதிக் கப்படலாம். தமக்கு $500,000 வெள்ளி தரப்படாவிட்டால் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மின்னிலக்க வங்கியின் உலகத் தலைவர் ஆலிஷான் ஜைடி, 47, பற்றி அவதூறு கருத்துகளை வெளியிடப்போவதாக பாலாஜி மிரட்டியதாக நீதிமன்ற ஆவணங் கள் தெரிவித்தன.

அதனைத் தொடர்ந்து வங்கி யின் சார்பில் கடந்த வியாழக் கிழமை போலிசில் புகார் செய்யப் பட்டது. விசாரணையில் இறங்கிய போலிசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவன் ரோடு அருகே பாலாஜியை கைது செய்தனர். மிரட்டல் சம்ப வம் தொடர்பில் அவரிடமிருந்து பல்வேறு மடிக்கணினிகளும் கைபேசிகளும் பறிமுதல் செய்யப் பட்டதாக போலிஸ் கூறியது. வங்கிக்கு மிரட்டல்களை அனுப்ப பாலாஜி பல்வேறு பொய் யான மின்னஞ்சல் கணக்குகளைக் கையாண்டதாக நம்பப்படுகிறது. மேலும், தம்மைப் பற்றிய அடை யாளத்தை மறைக்க வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட கைபேசித் தொடர்பையும் இணையத் தொடர் பையும் பயன்படுத்தி இருக்கலாம் என்ற தகவல் ஆரம்பகட்ட விசார ணையில் தெரிய வந்துள்ளது. $20,000 பிணையில் விடுவிக் கப்பட்டு இருக்கும் அவர் மீண்டும் இம்மாதம் 30ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்குத் திரும்ப வேண் டும்.