'தமிழ்மொழிப் பற்றை பிஞ்சு மனங்களில் விதைக்க உதவும்'

'தமிழ்மொழிப் பற்றை பிஞ்சு மனங்களில் விதைக்க உதவும்'

1 mins read
7c4165e4-ce9a-41c7-a2b7-8053d482c3b8
-

இர்ஷாத் முஹம்மது

அடுத்த ஆண்டு 'ஆரம்பகால தாய்மொழி கற்பித்தலில் சான்றிதழ் =தமிழ்' வகுப்பிற்குச் செல்ல இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறார் மழலையர் வகுப்பில் பயிலும் பிள்ளைகளுக்குக் கடந்த இருபது ஆண்டுகளாகக் கற்பித்து வரும் திருவாட்டி கோகிலவாணி சண்முகம், 42. தமிழ்மொழியில் நடத்தப்படும் இந்தப் புதிய பயிற்சி வகுப்பு மழலையருக்குத் தமிழ் கற்றுத்தரும் உத்திகளை மேம்படுத்த உதவும் என்று திருவாட்டி கோகிலவாணி நம்பிக்கை தெரிவித்தார். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கற்றல் வளங்கள் போதுமான அளவு இல்லை என்ற இவர், வெளிநாடுகளிலிருந்தே அவற்றை பெறவேண்டியுள்ள தற்போதைய நிலை மாறுவதை அறிந்து மட்டற்ற ஆனந்தம் அடைந்தார்.

பாலர் கல்விக்கு அரசாங்கம் கொடுக்கும் ஆதரவையும் குறிப் பாக தாய்மொழிக் கற்றல் தொடர் பில் நேற்று அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களும் வரவேற்கத்தக்கவை என்ற இவர், இதன்மூலம் தமிழ்ப் பற்றை சிறு பருவத்திலேயே திறம்படப் பயிரிடமுடியும் என்று சொன்னார். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக கல்சா பாலர் பள்ளி யில் தமிழாசிரியையாக உள்ளார்.

கடந்த பத்தாண்டுகளாக கல்சா பாலர் பள்ளியில் மழலையருக்குத் தமிழ் கற்பித்து வருகிறார் திருவாட்டி கோகிலவாணி சண்முகம், 42. படம்: கல்சா பாலர் பள்ளி