ரயில், பேருந்துகளிலும் தீபாவளி அலங்காரங்கள்

ரயில், பேருந்துகளிலும் தீபாவளி அலங்காரங்கள்

1 mins read
61a8b94d-caad-48dd-9eeb-4303956691b5
-
Google News Preferred Icon

தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வேளை யில், பேருந்துகள், ரயில்கள், ரயில் நிலையங்கள், பூன் லே ஒருங் கிணைந்த போக்குவரத்து நடுவம் போன்றவற்றிலும் செய்யப்பட்டுள்ள தீபாவளிக் கருப்பொருளை ஒட்டிய அலங்காரங்கள் கொண்டாட்ட உணர்வைக் கூட்டியுள்ளன. லிட்டில் இந்தியா கடைக் காரர்கள், மரபுடைமைச் சங்கம், நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகியவை இணைந்து இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளன. வடக்கு கிழக்கு ரயில் தடம், டௌன்டவுன் ரயில் தடம் ஆகியவற்றில் தலா ஒரு ரயிலிலும் லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள இணைப்புப் பாதையிலும் அன்னப் பறவை, தீபங்கள், வண்ணக் கோலங்கள் கொண்ட அலங்காரங் களும் தீபாவளி வாழ்த்துகளும் பயணிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளன.

லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தின் வண்ண அலங்காரம். வலதுபடம்: தீபாவளி கருப்பொருள் கொண்ட ரயில்களை அதிகார பூர்வமாக நேற்று முன்தினம் தொடங்கி வைத்த போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின் பயணிகளிடம் உரையாடினார். படங்கள்: நிலப் போக்குவரத்து ஆணையம்