அன்வார் அபார வெற்றி

அன்வார் அபார வெற்றி

2 mins read
e42ab8ec-4c45-4731-91bf-9487cd7a60f3
-

எதிர்பார்த்தபடியே மலேசியாவின் போர்ட் டிக்சன் தொகுதி இடைத் தேர்தலில் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், 71, பெரும் வெற்றி பெற்றார். இரண்டாம் நிலையில் வந்த பாஸ் கட்சி வேட்பாளர் முகம்மது நஸரி மொக்தாரைவிட அன்வார் 23,560 வாக்குகள் அதிகம் பெற் றார். அன்வாருக்கு 31,016 வாக்கு களும் மொக்தாருக்கு 7,456 வாக்குகளும் கிடைத்தன. அன்வாருக்குக் கடும் போட்டி யைத் தருவார் என எதிர்பார்க்கப் பட்ட முன்னாள் நெகிரி செம்பி லான் முதல்வரும் சுயேச்சை வேட்பாளருமான முகம்மது இசா அப்துல் சமதுக்கு 4,230 வாக்கு களே கிட்டின.

அன்வாரின் முன்னாள் உதவி யாளரான சைஃபுல் புக்காரிக்கு ஆதரவாக வெறும் 82 வாக்கு களே பதிவாகின. மொத்தம் 32 வாக்களிப்பு நிலையங்களில் நேற்றுக் காலை எட்டு மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி யுடன் நிறைவுபெற்றது. பதிவு பெற்ற 68,317 வாக்காளர்களில் 58.3 விழுக்காட்டினர் வாக்குச் செலுத்தினர். முன்னதாக, இம்மாதம் 9ஆம் தேதி மூன்று வாக்களிப்பு நிலை யங்களில் 6,636 ராணுவத்தினரும் அவர்களின் கணவர்கள் அல்லது மனைவியரும் 555 போலிசாரும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. ஆயினும், அவர்களில் 63 விழுக்காட்டினர் மட்டுமே வாக்குச் செலுத்தினர்.

பக்கத்தான் ஹரப்பான் கூட் டணி உடன்பாட்டின்படி, ஈராண்டு களுக்கு மட்டுமே இப்போதைய பிரதமர் மகாதீர் முகம்மது அப்பத வியில் நீடிப்பார். அதன்பின் பிரதமர் பொறுப்பை அவர் திரு அன்வாரிடம் ஒப்படைத்துவிடு வதாக கடந்த மே மாதம் பொதுத் தேர்தலுக்குமுன் உடன்படிக்கை ஏற்பட்டது.

இப்போது தேர்தலில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டதால் திரு அன்வார் இனி பிரதமராகப் பதவியேற்க எந்தத் தடையும் இருக்காது.

கடந்த மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் போர்ட் டிக்சன் தொகுதியில் வெற்றி பெற்ற திரு தன்யால் பாலகோபால் அப்துல்லா, திரு அன்வார் அந்தத் தொகுதியில் போட்டியிட ஏதுவாக சென்ற மாதம் 12ஆம் தேதி தமது எம்.பி. பதவியைத் துறந்தார்.