அன்வார்: அனைத்து இனத்தவரும் ஆதரவளித்தது திகைப்பூட்டுகிறது

அன்வார்: அனைத்து இனத்தவரும் ஆதரவளித்தது திகைப்பூட்டுகிறது

2 mins read
b8901d13-80f2-45d1-b9e4-fd22e154fa6b
-

மலேசியாவின் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் மற்ற போட்டியாளர்களை விட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திரு அன்வார் இப்ராகிம், அனைத்து இனத் தவரும் தமக்கு அமோக ஆதரவு அளித்தது திகைப்பூட்டுகிறது என்று கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, பக்கத்தான் ஹரப்பான் நடவடிக்கை நிலையத்தில் செய்தி யாளர்களிடையே பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வெற்றி தமது அரசியல் வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்றும் பக்கத்தான் ஹரப்பான் அரசு, அதன் சீர்திருத்த செயல் திட்டம் ஆகியவற்றுக்கு மக்கள் அளித்த நம்பிக்கை வாக்கெடுப்பு இது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று நாடாளுமன்ற நடவடிக் கைகளின் முதல் அங்கமாக திரு அன்வார் போர்ட்டிக்சன் தொகுதி யின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொள்வார் என 'தி ஸ்டார்' செய்தி வெளியிட்டிருந்தது.

தமது வெற்றி குறித்து பிரதமர் மகாதீர் முகம்மதுவுடன் தொலை பேசி வழியாகப் பேசியதாகக் குறிப் பிட்ட திரு அன்வார், கூட்டணிக் கட்சிகளுக்கும் மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதின் யாசினுக் கும் அவர்கள் அளித்த தேர்தல் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தின்போது போர்ட்டிக்சன் தொகுதி மக்களுக் குத் தாம் அளித்த வாக்குறுதிகள், திட்டங்கள் ஆகியவற்றை நிறை வேற்ற உறுதிபூண்டிருப்பதாகவும் அதன் தொடர்பில் நெகிரி செம்பிலான் முதல்வர் அமினுதின் ஹருனுடன் பேச இருப்பதாகவும் அவர் கூறினார்.

மலேசிய நாடாளுமன்றத்திற்கு அதிகாரபூர்வமாக மீண்டும் செல்லும் திரு அன்வார், அவை நடவடிக்கைகளைக் கவனமாகப் பார்ப்பதுடன் அரசாங்கக் கொள் கைகள் பற்றி அதிகம் விமர்சிக்க மாட்டார் எனவும் 'நிழல் பிரதமராக' நடந்துகொள்ளமாட்டார் எனவும் மலேசியாவின் உட்டரா பல்கலைக் கழக அரசியல், அனைத்துலகக் கல்வித் துறையின் மூத்த விரிவுரையாளர் முகமது ‌ஷுக்ரி ‌ஷுயிப் கருத்துரைத்தார்.

தேர்தல் வெற்றியை அடுத்து ஆதரவாளர்கள் மத்தியில் திரு அன்வார் இப்ராகிம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்