பாலியல் புகாருக்கு ஆளான இந்திய வெளியுறவு இணையமைச்சர் நடவடிக்கை

2 mins read
f93344cf-d944-4fcb-a9c3-6828246684e4
-

இதுவரை பன்னிரண்டு பெண் பத்திரிகையாளர்கள் தன் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ள நிலையில், அதைத் தொடங்கிவைத்த பிரியா ரமணி எனும் பெண் மீது இந்திய வெளி யுறவு இணையமைச்சர் எம்.ஜே. அக்பர், 67, அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளார். சமூக ஊடகங்களில் 'மீடூ' எனும் 'ஹேஷ்டேக்'குடன் பெயர் குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துவரு கின்றனர்.

அவ்வகையில், இணையமைச் சர் அக்பர் பத்திரிகை ஆசிரிய ராக இருந்தபோது தங்களிடம் பாலியல் தொல்லை தந்ததாக பிரியா உள்ளிட்ட 12 பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 'மீடூ' மூலம் அவரது பெயர் வெளியானபோது நைஜீரியாவில் இருந்த திரு அக்பர் நேற்று முன்தினம் நாடு திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் பேசுகையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை என்றும் அவற்றை சட்டப்படி சந்திக்கத் தயார் என்றும் கூறியிருந்தார். அதற்கேற்ப, முதன்முதலில் தன் மீது புகார் கூறிய பிரியா ரமணி எனும் பத்திரிகையாளர் மீது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவர் அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளார்.

பணியிடத்தில் தமக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து ஓராண்டுக்குமுன் சஞ்சிகை ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார் பிரியா. அப்போது, தம்மைத் துன் புறுத்தியவரின் பெயரைக் குறிப் பிடாத அவர், இம்மாதம் 8ஆம் தேதி டுவிட்டரில் 'அக்பர்தான் அந்த நபர்' என வெளிப்படை யாகச் சொன்னார்.

இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வலியுறுத்தி இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள அவரது வீட்டின்முன் போராட்டத்தில் ஈடுபட்ட இளையர் காங்கிரசார். படம்: ராய்ட்டர்ஸ்