போர்ட் டிக்சன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மலேசிய நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பின ராகப் பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். எம்.பி.யாக நாடாளுமன்றத்திற்குத் திரும்பியபோதும் அமைச்சரவையில் இடம்பெறும் எண்ணம் தமக்கில்லை என்று திரு அன்வார் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதே நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எனும் அடிப்படையில் தமது பங்களிப்பு இருக்கும் என்று அவர் சொன்னார்.
"நாடாளுமன்றம் மூலமாகவும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலமாகவும் எனது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குவேன் என்று பிரதமர் மகாதீர் முகம்மதிடம் தெரிவித்தேன். அதே வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு வருக்கான பணிகளின் அங்கம் என்பதால் அமைச்சர்களுடனும் இதர எம்.பி.க்களுடனும் கலந்துறவாடுவேன்," என்றார் திரு அன்வார்.
அமைச்சராகப் பொறுப்பேற்கும் எண்ணம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "இல்லை. எனது முந்தைய முடி வில் நான் உறுதியாக இருக்கி றேன். அமைச்சரவையில் இடம் பெறும் திட்டமில்லை. எம்.பி.யாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்," என்று பதிலளித்தார். அதேபோல, பிரதமர் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பது பற்றி டாக்டர் மகாதீர் எதுவும் கோடிகாட் டினாரா என்று கேட்டதற்கு, "இல்லை. என்னைப் பொறுத்தவரை அது ஒரு பிரச்சினையே இல்லை. டாக்டர் மகாதீருக்கு எவ்வித காலவரம்போ நெருக்கடியோ தராமல் அவரைப் பிரதமராக நீடிக்கவிடுங்கள். அது மிகவும் முக்கியம்," என்றும் திரு அன்வார் வலியுறுத்தினார்.

