கள்ளத்தனமாக வெளியேற முயற்சி; இருவர் கைது

கள்ளத்தனமாக வெளியேற முயற்சி; இருவர் கைது

2 mins read
f10082f8-b0e7-45a9-94bb-fe60fb459724
-

இந்தியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை சட்டவிரோத முறையில் சிங்கப்பூரைவிட்டு வெளியே கொண்டுசெல்ல முயன்ற மலேசிய ரான 37 வயது வாகன ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். துவாஸ் சோதனைச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.20 மணிக்கு அந்த ஆடவர் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட பேருந்து ஒன்றை ஓட்டிவந்தார். அவர் பதற்றத்துடன் காணப் பட்டதை அடுத்து அதிகாரிகள் பேருந்தைச் சோதனையிட்டனர். சாமான்கள் ஏற்றும் பகுதியில் ஆடவர் ஒருவர் பதுங்கியிருந்ததை அதிகாரிகள் கண்டனர்.

பதுங்கியிருந்தவர் 25 வயது இந்திய ஆடவர் என்றும் வேறு ஒரு வழக்குத் தொடர்பில் அந்த ஆடவர் நீதிமன்றத்தில் முன்னி லையாக இருந்தார் என்றும் பூர்வாங்க புலன்விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரைவிட்டு அந்த இந்திய ஆடவரை வெற்றிகரமான முறையில் வெளியே கொண்டு சென்றுவிட்டால் பேருந்து ஓட்டு நருக்கு $700 கொடுக்கப்படும் என்று யாரோ ஒருவர் உறுதியளித்ததாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது. பேருந்து ஓட்டுநர் மீதும் பதுங்கி இருந்த ஆடவர் மீதும் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசா முடிந்தபின்னும் தங்கி இருந்தால் அல்லது சட்டவிரோத மாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றால் ஆறு மாதம் வரை சிறைத்தண்டனையும் குறைந்தது மூன்று பிரம்படிகளும் விதிக்கப் படலாம். அதேபோல, சட்டவிரோதமாக இங்கிருந்து வெளியேற முயல்வோ ருக்கு $2,000 வரை அபராதமும் ஆறு மாதம் வரை சிறைத்தண்ட னையும் விதிக்கப்படலாம். வெளிநாட்டினர் சட்டவிரோத மாக சிங்கப்பூருக்குள் நுழைய அல்லது இங்கிருந்து வெளியேற அல்லது விசா முடிந்த பின்னும் தங்கியிருக்க முயல்வது கடுமை யாகக் கருதப்படும் என்று ஆணை யம் எச்சரித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 25 வயது ஆடவரை சிங்கப்பூரைவிட்டு வெளியே கொண்டு சென்றுவிட்டால் $700 தரப்படும் என்று பேருந்து ஓட்டுநரிடம் உறுதி தெரிவிக்கப்பட்டு இருந்தது. படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்