சிலேத்தார் ஆகாயத் தொழில் துறை பூங்காவில் பழமை பாது காப்புக்குட்பட்ட பதின்மூன்றுக்கு மேற்பட்ட காலனித்துவ பங்களாக் கள் புத்துயிர் பெறும் வகையில் உருமாறவிருக்கின்றன. சில்லறைக் கடைகள், உணவு மற்றும் பானம் விற்கும் பலதரப் பட்ட கடைகள் அங்கு திறக்க ப்பட வுள்ளன. அதற்கான உருமாற்ற சீரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை ஜூரோங் நகராண் மைக் கழகம் நேற்று அறிவித்தது. 300 ஹெக்டர் பரப்பளவுள்ள இந்தப் பூங்காவில் மொத்தம் 32 பழமை பாதுகாக்கப்பட்ட பங்க ளாக்கள் உள்ளன. ஏற்கெனவே அப்பகுதியில் நான்கு பங்களாக் கள் பலதரப்பட்ட கடைகளுடன் உரு மாற் றம் பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பதினைந்து பங் க ளாக் கள் இப்போது காலியாக உள் ளன. அத்துடன் அங்கு அறுபதுக்கும் மேற்பட்ட ஆகாயத் தொழில்துறை யைச் சேர்ந்த உள் ளூர், வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளன. சிலேத்தாரில் பூங்கா வுக்கு வெளி யில் சுமார் 130 காலனித்துவ பங்களாக்கள் உள்ளன.

