சிங்கப்பூர் மக்களுக்கு செய்தியை வழங்குவதோடு நாவூற வைக்கும் உணவையும் வழங்குகிறது சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்). தம் உணவு வெகுமதித் திட்டத்தின் (Food Rewards Programme) மூலம் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை உணவு வண்டி ஒன்று மூன்று இடங்களில் நிறுத்தப்பட்டி ருக்கும். இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இன்று 'பெஸ்ட் ஃபுட் கேட்டரர்' என்ற உணவு விநியோகிப்பாளரு டன் இணைந்து கேஷ்வரினா கறி உணவகம் தயாரிக்கும் பிரியாணிப் பொட்டலங்கள் வாசகர்களுக்கு வழங்கப்படும். சம்பால் கோழி, சம்பால் முட்டை, கத்திரிக்காய் பச்சடி போன்றவை பிரியாணிப் பொட்டலங்களில் இருக்கும்.
பீஷான் 'ஜங்ஷன் 8' கடைத் தொகுதியில், டோஸ்ட்பாக்ஸ் (Toastbox) என்ற காப்பிக் கடைக்கு வெளியே இந்த உணவு வண்டி நிறுத்தப்பட்டிருக்கும். எஸ்பிஎச் செய்தித்தாள்களின் நேரடிச் சந்தாதாரர்கள் 'எஸ்பிஎச் ரிவார்ட்ஸ்' என்ற செயலின் மூலம் உணவு வண்டி பற்றிய அறிவிப் பைக் காட்டினால் போதும். அவர் கள் ஒரு பொட்டலம் இலவச மதிய உணவைப் பெற்றுக்கொள்ள லாம். அதுபோக @SPH Rewards என்ற ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் பின்தொடர்ந்து, #SPH REWARDSYOU என்ற படத் தலைப்போடு படம் ஒன்றைப் பதி வேற்றம் செய்தால், ஓர் இலவச 'சுவிட்டஸ் மோமன்ட்ஸ் சாக்லட் ப்ரௌனி'யை எஸ்பிஎச் வாசகர்கள் பெறலாம். எஸ்பிஎச் செய்தித்தாள்களின் சந்தாதாரர்கள் அல்லாதவர்களுக் கும் உணவு கிடைக்க வாய்ப்புண்டு.
எஸ்பிஎச் உணவு வெகுமதித் திட்டத்தின் உணவு வண்டி, நேற்று 'ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ்' கட்டடத்திற்கு வெளியே 'வாஃபுகேன்' (Wafuken) என்ற உணவகத்தின் உணவை அளித்தது. படம்: எஸ்பிஎச்

