எண்ணெய்சாரா ஏற்றுமதி 8.3% வளர்ச்சி; மின்னணு ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது

எண்ணெய்சாரா ஏற்றுமதி 8.3% வளர்ச்சி; மின்னணு ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது

1 mins read
3b368f12-20c7-45b1-bce6-002589c9ac10
-

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி ஆண்டுக் காண்டு அடிப்படையில் சென்ற மாதம் 8.3 விழுக்காடு அதிகரித் தது. மாதாந்திர அடிப்படையிலும் சென்ற மாதம் அதிக ஏற்றுமதி இருந்தது. ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் அது ஐந்து விழுக்காடு அதிகம். ஆண்டுடனும் மாதத்துடனும் ஒப்பிடும்போது ஏற்றுமதி விகிதம் அதிகரித்தபோதிலும் ஆய்வாளர் களின் முன்னுரைப்பைவிட அது குறைவுதான். செப்டம்பர் மாதத்தில் 11.1 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று புளூம்பெர்க்கின் முன்னு ரைப்பு ஆய்வு தெரிவித்திருந்தது.

மின்னணு அல்லாத ஏற்றுமதி யில் சென்ற மாதம் 11.9 விழுக்காடு ஏற்றம் காணப்பட்டது. இது ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் 7.8 விழுக்காடு அதிகம். மருந்தியல் துறை, உணவு தயாரிப்பு போன்றவை இந்த ஏற்றத்திற்கு உதவின. இருந்தபோதிலும் மின்னணு ஏற்றுமதியின் வீழ்ச்சி சென்ற மாத மும் தொடர்ந்தது. எண்ணெய் சாரா உள்நாட்டு மின்னணு ஏற்று மதி சென்ற மாதம் 0.9 விழுக்காடு இறங்கியது. அந்த வீழ்ச்சி ஆகஸ்ட் மாதத் தில் 1.5 விழுக்காடாக இருந்தது. ஆண்டுக்காண்டு அடிப்படை யிலும் இது கடந்த டிசம்பர் முதல் இறக்கத்தைக் கண்டு வருகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் எழுந்து வரும் வர்த்தகப் பதற்றம் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.