விமானக்காட்சி மூலம் $343 மி. தொகை செலவிடப்பட்டது

விமானக்காட்சி மூலம் $343 மி. தொகை செலவிடப்பட்டது

1 mins read
4dc18d1d-6c10-428a-bcc4-be2ab1856689
-

சிங்கப்பூர் விமானக்காட்சி 2018 மூலம் $343 மில்லியனுக் கும் அதிக தொகை செலவிடப் பட்டு இருக்கிறது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சிங்கப்பூர் விமானக்காட்சி இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ஆறு நாட்களுக்கு நடந்தது. அதில் கலந்துகொண்ட வருகையாளர்கள், சுற்றுப் பயணிகள், காட்சியாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் முதலா னோர் அந்த அளவுக்குச் செல விட்டுள்ளனர்.

விமானப் பயணம், தங்கு மிடம், கண்காட்சி இடத்திற் கான செலவு, பொழுதுபோக்கு, உணவு, பானம், கடைகளில் பொருள் வாங்குதல் ஆகிய வற்றுக்கான செலவு முதலா னவை அவற்றில் அடங்கும். இந்த ஆண்டு செலவிடப் பட்ட தொகை 2016ல் செலவிடப் பட்ட தொகையைவிட 4% அதி கம் என்று காடென்ஸ் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு நடத்திய அந்த ஆய்வு கூறுகிறது. விமானக்காட்சியில் 147 நாடு களைச் சேர்ந்த 54,000 வர்த்தகப் பேராளர்கள் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 விமானக்காட்சி தொடர்பில் மொத்தம் செலவிடப்பட்ட தொகை 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4% கூடியிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்