சிகரெட் கடத்தலைத் தடுக்க துவாஸ் சோதனைச்சாவடியில் 'எஸ்க்ரே ஸ்கேனர்'கள் எனப்படும் ஊடுகதிர் வருடிச் சாதனங்கள் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று பொருத்தப்பட்டன. அதற்கான பலன் இரண்டு வாரங்களில் தெரிந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. மலேசியாவில் பதிவு செய்யப் பட்ட பேருந்தில் மறைத்துவைக்கப் பட்டிருந்த வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகள் சிக்கின. அவை ஊடுகதிர் வருடிச் சாதனத்தின் உதவியால் கண்டு பிடிக்கப்பட்டன.
சட்டப்படி அந்த சிகரெட் டுகளுக்கு $105,434 வரியும் $7,727 பொருள், சேவை வரியும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். மலேசியாவைச் சேர்ந்த அந்த 32 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 17 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஊடுகதிர் வருடிச் சாதனங்கள் பொருத்தப்பட்டதை அடுத்து, சோதனைச்சாவடியைப் பேருந்து கள் கடந்தபோது அதில் மூன்று பயணிகள் தூங்கிக்கொண்டிருந் ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சிங்கப்பூருக்குள் நுழையும் போது குடிநுழைவுச் சோதனைக் காகப் பயணிகள் பேருந்துகளிலிருந்து கீழே இறங்க வேண்டும். ஊடுகதிர் வருடிச் சாதனங் களின் உதவியால் பாதுகாப்புப் பணிகளை குடிநுழைவுச் சோத னைச்சாவடி ஆணையத்தின் அதிகாரிகளால் துரிதமாகச் செய்ய முடிவதாக ஆணையத்தின் உதவி ஆணையாளர் கொலின் டான் தெரிவித்தார். "இதற்கு முன்பு ஒரு பேருந்தை முழுமையாகச் சோதனையிட குறைந்தது நான்கு அதிகாரி களுக்கு இரண்டு மணி நேரம் வரை எடுக்கும்.
புதிய ஊடுகதிர் வருடிச் சாதனங்களைக் கொண்டு துவாஸ் சோதனைச் சாவடியைக் கடந்து செல்லும் பேருந்துகள் சோதனையிடப் படுகின்றன. இந்தப் புதிய ஏற்பாட்டின் மூலம் சிகரெட் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். புதிய ஏற்பாட்டின் காரணமாகப் பாதுகாப்புப் பணிகள் துரிதமாக நடைபெறுவதாக குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. படம்: சிஎம்ஜி