வாழ்வின் வளரும் பருவத்தில் கெட்ட சகவாசத்துடன் வளர்ந்த தால் டேனியல் டே என்பவர் கோபக்கார இளைஞனாக வளர்ந் தார். இதனால், போதைப் பொருள், கும்பல் சண்டை என சட்டவிரோத காரியங்களில் அடிக்கடி ஈடுபட் டார். அதைத் தொடர்ந்து ஐந்து முறை சிறுவர் சீர்திருத்த நிலை யத்திற்கு அனுப்பப்பட்டார். இதில் கடைசியாக அங்கு சென்றதற்குக் காரணம், தன்னை அங்கு அனுப் பியதற்கு பழிவாங்கும் முயற்சியாக அந்த நிலையத்தை சிவப்பு சாயம் கொண்டு சேதப்படுத்தும் முயற்சி யில் ஈடுபட்டதால். இன்று திரு டே, அன்றிருந் தவராக இல்லாமல், திருந்திய மனிதராக, இஸ்தானாவில் நேற்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியனிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
கடந்த 1976ஆம் ஆண்டி லிருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருது, தாங்கள் ஈடுபட்டிருக் கும் துறைகளில் சிறந்து விளங் குபவருக்கு மட்டுமல்லாது சமூ கத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற தணியாத ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு அளிக்கப்படுகிறது. தற்பொழுது 29 வயது நிரம்பி யுள்ள திரு டே, தவறு செய்யும் அபாயத்தில் உள்ள சிறார், சிறப்புத் தேவையுடையவர்கள், உடற்குறை யுள்ளவர்கள், மனநலப் பிரச்சினை கள் உள்ளவர்களை பெருவாரி யாகக் கொண்ட ஊழியர்களின் துணைகொண்டு 'பாப் ஜாய்' என்ற உணவகத் தொடரை நடத் துகிறார்.
சிங்கப்பூர் இளையர் விருது பெற்ற அறுவர். (இடமிருந்து) பாடகரும் பாடலாசிரியருமான இஞ்ச் சுவா, 29, லியன் அறநிறுவனத்தின் ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டுப் பிரிவின் இணைத் தலைவர் ஜீன் லூ, 33, அரசுத்தரப்பு வழக்கறிஞரான எமண்டா சோங், 28, சிங்ஹெல்த் குழுமத்தின் எலும்புத்துறை இணை மருத்துவ ஆலோசகரான ஹமிது ரஹ்மத்துல்லா, 32, உடற்குறையுள்ள விளையாட்டு வீரரான ஜேசன் சீ, 34, 'பாப் ஜாய்' உணவகத்தின் நிறுவனரான டேனியல் டே. 29. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

