எட்டு கார்கள் விபத்து; பெண்கள் இருவர் காயம்

எட்டு கார்கள் விபத்து; பெண்கள் இருவர் காயம்

1 mins read
996f94c0-ab8a-490f-9b3f-a87e9c439bce
-

தெம்பனிஸ் விரைவுச்சாலையில் நேற்று இரண்டு விபத்துகள் நிகழ்ந்தன. மொத்தம் எட்டு கார்கள் விபத்துக்குள்ளாகின. இதனால் தெம்பனிஸ் விரைவுச் சாலையில் நேற்று காலை உச்ச நேரத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 8.30 மணி அளவில் சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் மூன்று கார்கள் விபத்துக் குள்ளானது தொடர்பாக தகவல் கிடைத்ததாக போலிசார் தெரி வித்தனர்.

கார் ஓட்டிய 50 வயது பெண்ணும் அவருடன் பயணம் செய்த 35 வயது பெண்ணும் காயமுற்றனர். அவர்கள் இருவரும் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முன்னால் சென்றுகொண் டிருந்த கார் திடீரென்று 'பிரேக்' போட்டதால் விபத்து நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.

விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து ஏறத்தாழ 20 மீட்டர் தூரத்தில் ஐந்து கார்கள் விபத்துக்குள்ளாகின. விபத்தின் காரணமாக வெள்ளி நிற கார் ஒன்று அதற்கு முன்னால் இருந்த கார் மீது ஏறியது. இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை.

விபத்தின் காரணமாக முன்னால் இருந்த கார் மீது ஏறிய வெள்ளி நிற கார் (இடது). படம்: Singapore Road Accident ஃபேஸ்புக்