கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பான பாதுகாப்பு, விழிப்புணர்வு திட்டம்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பான பாதுகாப்பு, விழிப்புணர்வு திட்டம்

1 mins read
3424ec8c-41ae-476d-b622-67505a4ae3dd
-

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பில் அதிக பெண்கள் பெப் ஸ்மியர் சோதனைகள் செய்து வந்தாலும் கர்ப்பப்பை வாய் புற்று நோயை முற்றிலும் ஒழிக்க சிங்கப்பூர் புற்றுநோய் சங்கம் மூன்றாண்டு திட்டம் ஒன்றைத் தொடங்கி உள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மனித 'பாபிலோமாவைரஸ்' (ஹெச்பிவி) எனும் நோய்க் கிருமியால் ஏற்படுகிறது. இதற்கு எதிராகத் தடுப்பூசி பெற்றுக்கொள்ள சிறுமிகள், இளம் பெண்கள் ஆகியோரை ஊக்கு விக்கத் திட்டங்கள் உள்ளதாக சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் ரவிந்தரன் கணேஸ்வரன் நேற்று அறிவித்தார். ஹெச்பிவி கல்வி, நோய்த் தடுப்பு திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாகச் அமல்படுத்தப்படும்.

சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் (வலமிருந்து மூன்றாவது) கலந்துகொண்ட நேற்றைய நிகழ்வில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட சிறுமி நர்நிஷா (இடமிருந்து இரண்டாவது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்