அமைச்சர் ஈஸ்வரன்: தேவையுள்ளோரை நினைவில் கொண்டு உதவிக்கரம் நீட்டுங்கள்

2 mins read
2cf4742a-5cca-422f-8cc5-cc32eccb1a97
-

அமைச்சர் ஈஸ்வரன்: தேவையுள்ளோரை நினைவில் கொண்டு உதவிக்கரம் நீட்டுங்கள் இர்ஷாத் முஹம்மது உற்றார் உறவினருடன் சேர்ந்து பண்டிகையைக் கொண்டாடும் அதே வேளையில் சமுதாயத்தில் உதவி தேவைப்படுவோரை நினை வில்கொண்டு அவர்களுக்கு உத விக்கரம் நீட்டுவதை நாம் தொடர்ந்து உறுதிசெய்ய வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வலியுறுத்தி இருக் கிறார். லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில் அமைக்கப்பட்டிருக்கும் தீபாவளிச் சந்தைக்கு வருகை தந்த அவர், தீபாவளிக்குத் தேவை யான பொருட்களை வாங்க வந்த மக்களோடு கலந்துறவாடி மகிழ்ந்தார்.

அப்போது, வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றம் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் இந்திய நற்பணிச் செயற்குழு சார்பாக, சிண்டாவின் 'புரொஜெக்ட் கிவ்' திட்டத்திற் காகத் திரட்டப்பட்ட நன்கொடைத் தொகைக்கான மாதிரிக் காசோ லையை வழங்கினார். "கல்வி மேம்பாடு மூலமாக நம் சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்பதே சிண்டாவின் முக்கிய கொள்கை. சிண்டாவின் வளங்களில் பாதிக் கும் மேல் இதுபோன்ற கல்வி தொடர்பான திட்டங்களுக்கே வழங்கப்படுகிறது.

அதனால் 'புரொஜெக்ட் கிவ்' போன்ற திட்டங்களுக்கு நாம் முழு ஆதரவு தரவேண்டும். இதன்மூலம் நம் சமூகத்தினருக்கு நாம் உதவிக் கரம் நீட்ட முடியும்," என்று திரு ஈஸ்வரன் கூறினார். சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாண வர்கள் சங்கம் ஆகியவை சார்பா கவும் அவர் மாதிரிக் காசோலை களை வழங்கினார்.

லிட்டில் இந்தியா, கேம்பல் லேன் தீபாவளிச் சந்தைக்கு நேற்று வருகைபுரிந்த அமைச்சர் எஸ். ஈஸ்வரன் (வலமிருந்து இரண்டாவது), மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (வலது). படம்: திமத்தி டேவிட்