4ஆம் தலைமுறைத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர்; ஹெங் சுவீ கியட், சான் சுன் சிங் புதிய துணைப் பிரதமர்களாக ஆகக்கூடும்

4ஆம் தலைமுறைத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர்; ஹெங் சுவீ கியட், சான் சுன் சிங் புதிய துணைப் பிரதமர்களாக ஆகக்கூடும்

1 mins read
a7f68234-337e-4e34-a2d4-1b7604203e3d
-

இர்ஷாத் முஹம்மது

மக்கள் செயல் கட்சியின் புதிய மத்திய செயற்குழுவில் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், 57, முதலாம் உதவித் தலைமைச் செயலாளராகவும் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங், 49, இரண்டாம் உதவித் தலைமைச் செயலாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மசெகவின் தலைமைச் செயலாளராகப் பிரதமர் லீ சியன் லூங் தொடர்ந்து பதவி வகிக்கிறார்.

சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியின் புதிய மத்திய செயற்குழு கடந்த 11ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து இன்று புதிய பொறுப்புகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

புதிய இரு உதவித் தலைமைச் செயலாளர்களும் துணைப் பிரதமர்களாக விரைவில் அறிவிக்கப்படலாம். முதலாம் உதவித் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற அமைச்சர் ஹெங் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவி ஏற்கக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மசெகவின் புதிய தலைவராக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், 59, அறிவிக்கப்பட்டார்.

தற்போது 66 வயதாகும் பிரதமர் லீ தமது 70 வயது ஆகும்போது அடுத்தத் தலைமுறையினரைச் சேர்ந்தவரிடம் தம் பொறுப்பை ஒப்படைக்கப்போவதாகக் கூறியிருந்தார்.

இன்று அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்புகளால் ஓரளவு அடுத்த பிரதமராகத் திரு ஹெங் பதவி ஏற்கக்கூடும் என்பது தெரிகிறது. இதற்கு முன்னர் திரு லீ குவான் இயூவிடமிருந்து திரு கோ சோக் டோங் பதவி மாறும்போதும் பின்னர் திரு லீ சியன் லூங் பிரதமராகப் பதவி ஏற்றபோதும் இதுபோன்ற தலைமைத்துவ மாற்றங்களை மசெக அறிவித்தது.