கிறிஸ்துமஸ் ஒளியூட்டு குறித்து அதிருப்தி

1 mins read
f8bfc715-7cae-4686-8b41-4f84884cf3fa
-

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான இந்த ஆண்டின் ஒளியூட்டு குறித்து சிங்கப்பூர் தேசிய தேவா லயங்கள் மன்றம் தனது கவ லையையும் அதிருப்தியும் வெளிப்படுத்தியது. இம்மாதம் 10ஆம் தேதி தொடங்கிய ஒளியூட்டில் பயன் படுத்தப்பட்ட வால்ட் டிஸ்னி கேலிச்சித்திர கதாபாத்திரங்க ளுக்கும் கிறிஸ்து மசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மன்றத்தின் பொதுச் செயலாளர் பாதிரியார் டாக்டர் வாய் ஃபூங் நியான் தெரிவித்தார். "டிஸ்னி கதாபாத்திரங்களை மட்டும மையமாகக் கொண்டுள்ள இந்த ஒளியூட்டுக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் அர்த்தமுள்ள எந்தத் தொடர்பும் இல்லை.

கிறிஸ்துவ நாள்காட்டியில் இடம் பெறும் இந்தப் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடு கிறது," என்று டாக்டர் வாய், பயணத்துறைக் கழகத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.

ஒளியூட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆர்ச்சர்ட் ரோடு வர்த்தக சங்கமும் சிங்கப்பூர் பயணத்துறை கழகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், தேவாலயங்கள் மன்றத்திடம் இது குறித்த புரிந்துணர்வை எட்ட மேலும் கலந்துரையாட விரும்பு வதாக குறிப்பிடப்பட்டது.

ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள கிறிஸ்துமஸ் ஒளியூட்டு அலங்காரங்களில் வால்ட் டிஸ்னி கேலிச்சித்திர கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்