பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பிரசார இயக்கம்

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பிரசார இயக்கம்

1 mins read
47816dc2-9b25-4ba6-9547-51c8a6ae76fe
-

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பயன் பாட்டைக் குறைப்பதற்கான பிரசார இயங்கம் தொடங்கப்பட்டுள்ளது. 'த ஒன் லெஸ் பிளாஸ்டிக்' என்னும் அந்த பிரசாரத்திற்காக சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மன்றம், டிபிஎஸ் வங்கி ஆகியவற்றோடு முக்கியமான நான்கு பேரங்காடிகள் கைகோர்த்துள்ளன. ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், பிரைம் குழுமம், டெய்ரி ஃபார்ம் குழுமம் ஆகியன அவை. இவற்றில் பிரைம் குழுமம் மஹோட்டா, பிரைம் பேரங்காடி ஆகியவற்றை நடத்துகிறது. அதேபோல டெய்ரி ஃபார்ம் குழுமம் கோல்ட் ஸ்டோரேஜ், ஜயண்ட் ஆகிய பேரங்காடிகளைத் தன்வசம் வைத்துள்ளது. மீண்டும் பயன்படுத்தப்படக் கூடிய பைகளை க் கையாளுமாறு பயனீட்டாளர்களை ஊக்கப்படுத் தும் சாலைக்காட்சிகளை நடத்து வதும் பிரசார இயக்கத்தில் அடங் கும். இயக்கத்தில் பங்கெடுத்துள்ள 16 பேரங்காடிகளில் நாளை மறு தினம் சனிக்கிழமை தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வரையில் சாலைக்காட்சிகள் நடத்தப்படும்.

மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய பையுடன் சுற்றுச்சூழல், நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விவரம்: epaper.tamilmurasu.com.sg