பாலஸ்டியர் வட்டாரத்தில் முதி யோருக்கு மரபுடைமை நடைப் பயணங்களை நடத்துவதற்கான தூதுவர்களாக 10 முதியவர்கள் பயிற்சி பெற்று உள்ளனர். முதி யோருக்காக நேற்று அதிகாரபூர்வ மாகத் தொடங்கப்பட்ட இந்த நடைப் பயணத்தின் பாலஸ்டியர் வட்டாரத்திலுள்ள வரலாற்றுத் தலங்களுக்கும் பாரம்பரிய வர்த்தக இடங்களுக்கும் அவர்கள் சென் றனர். மாதந்தோறும் நடத்தப்படும் இந்த நடைப் பயணங்கள் ஒவ் வொன்றும் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீடிக்கும். ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 20 முதியவர்கள் பங்குபெறுவர்.
பாலஸ்டியர் வட்டாரத்தில் மட்டு மின்றி, கம்போங் கிளாமிலும் லிட்டில் இந்தியாவிலும் இத்தகைய நடைப் பயணங்கள் அடுத்தாண்டு தொடங்கப்படும் எனக் கூறப் படுகிறது. அபாயங்களை எதிர் நோக்கும் முதியோர்களின் தனி மையைக் குறைப்பது இந்தத் திட் டத்தின் நோக்கம் என்று தேசிய மரபுடைமைக் கழகத்தின் கொள்கை மற்றும் சமூகத்திற் கான உதவி தலைமை நிர்வாக அதிகாரி எல்வின் டான் தெரிவித்தார்.
தேசிய மரபுடைமைக் கழகம் ஏற்பாடு செய்துள்ள மரபுடைமை நடைப்பயணத்தின் மூத்த குடிமக்கள், கிம் கியேட் ரோட்டுக்கும் பாலஸ்டியர் ரோட்டுக்கும் இடையிலான சந்திப்பைக் கடந்து செல்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

