மரம் விழுந்து 14 பேர் காயம்

மரம் விழுந்து 14 பேர் காயம்

1 mins read
db7ae828-b3fa-4c56-8f38-e6f8f40fd1e4
-

செம்பவாங் பூங்காவில் மரம் ஒன்று கீழே விழுந்ததில் 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பியூலியு சாலையில் மரம் விழுந்த அச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து நேற்று மாலை 5.55 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. விழுந்த மரத்தின் அடியில் எவரும் மாட்டிக்கொள்ளவில்லை எனக் கூறப்பட்டது. மரம் விழுந்ததில் ஒரு காப்பிடமும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப் பட்டது. செம்பவாங் வட்டாரத்தில் நேற்று பிற்பகலில் மழை பெய்தது. சிங்கப்பூரின் வடபகுதியில் பலத்த காற்றுடன் மிதமானது முதல் கனத்த மழை பெய்தது என்று தேசிய சுற்றுப்புற வாரியமும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்/லோக நாதன் ராஜு