மெக்பர்சனில் அமைந்திருக்கும் 'ரென்டோக்கில் இனிஷியல் சிங்கப்பூர்' எனும் பூச்சிக்கொல்லி நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று காலை பெருந்தீச்சம்பவம் நிகழ்ந்தது. கொளுந்துவிட்டு எரிந்த தீயும் கரும்புகையும் பல நூறு மீட்டருக்கு அப்பாலிருந்து கூட பார்க்க முடிந்தது. பூச்சிக் கொல்லி கருவிகளில் பற்றிய தீ இரண்டு மணி நேரப் போராட் டத்துக்குப் பிறகு அணைக்கப் பட்டது.
காலை 9.20 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்தை அடைந்தது. 14 அவசர உதவி வாகனங்களுடன் 45 தீயணைப் பாளர்களைத் தீ அணைப்புப் பணியில் அது ஈடுபடுத்தியது. ஏழு குழாய்களில் தண்ணீரும் நுரையும் பீய்ச்சியடிக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது. சூடான பொருட்களிலிருந்து மேலும் தீ ஏற்படாமல் இருப்பதற் கான பணிகளும் பின்னர் மேற்கொள்ளப்பட்டன.
ரென்டோக்கில் நிறுவனத்தின் தரைத்தளமும் பொருட்கள் வைக்கப்படும் அறை ஒன்றும் முற்றிலும் தீக்கிரையாகின.
மெக்பர்சனில் உள்ள ரென்டோக்கில் இனிஷியல் நிறுவனத் தலைமையகத்தில் நேற்று காலை கரும்புகையுடன் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. படம்: வான் பாவ் வாசகர்

