இந்தோனீசியாவில் சுமத்ரா, ஜாவா தீவுகளுக்கு இடையில் உள்ள சுண்டா நீரிணையில் இருக்கும் கடலோர பகுதி களை சுனாமி தாக்கியதை அடுத்து 222 பேர் கொல்லப்பட்டனர். ஆயி ரத்துக்- கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள- தாக அதிகாரிகள் தெரி வித்த னர். பேரலை காரணமாக 558 வீடுகள் அழிந்துவிட்டதாகவும் ஒன்பது ஹோட் டல்கள் மோசமாக சிதைந்து போய்விட்ட தாகவும் 60 உணவகங்களுக்கு அதே கதி ஏற்பட்டது என்றும் 350 படகுகள் உடைந்துபோய்விட்டதாகவும் தெரிவிக் கப்பட்டது. சுமத்ரா தீவின் தென்பகுதி கடற் கரையையும் ஜாவா தீவின் மேற்கு முனை கடற்கரையையும் உள்ளூர் நேரப் படி சனிக்கிழமை இரவு 9.30 மணிக்குப் பேரலைகள் தாக்கின. அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் திடீரென்று அலை கள் கிளம்பி உள்ளே புகுந்தன. அப்பகுதிகள், குடியிருப்புகளுக்கும் சுற்றுலா இடங்களுக்கும் பெயர் பெற் றவை. அனாக் (குழந்தை) கிரக்காத்தோ என்ற எரிமலை பொங்கியதால் கடலுக் குள் நிலம் சரிந்ததாக தெரியவந்தது. கிரக்காத்தோ என்ற எரிமலை 1883ல் பொங்கியது. அதன் காரணமாக 36,000 பேர் கொல்லப்பட்டனர். அந்த எரிமலை பொங்கியதால் ஏற்பட்ட சாம்பல்கள் ஒன்றுசேர்ந்து ஒரு சிறிய எரிமலை கடலில் உருவாகியது. அந்தக் குழந்தை எரிமலைதான் இப்போது பொங்கி சுனா மியை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.
ஜாவாவில் இருக்கும் பாண்டென் மாநிலத்தில் பாண்டெக்லாங் என்ற இந்த வட்டாரம்தான் படுமோசமாக பாதிக்கப்பட்டது. இங்கு உஜுங் குளோன் என்ற தேசிய பூங்காவும் பிரபலமான கடற்கரையும் இருக்கின்றன. சுனாமி பாதிப்பை அடுத்து இந்த ஆடவர் செய்வதறியாது தவித்து நிற்கிறார். படம்: இபிஏ
விவரம்: epaper.tamilmurasu.com.sg

