ஆறு மாடி உயரத்திற்குப் பீய்ச்சியடித்த நீர்

ஆறு மாடி உயரத்திற்குப் பீய்ச்சியடித்த நீர்

1 mins read
3c1e7a0a-72a9-453a-89ee-66f19a4db5af
-

பொத்தோங் பாசிர் அவென்யூ 1, புளோக் 101ல் நேற்றுக் காலை பத்து மணியளவில் நீர்க்குழாய் கசிவு ஏற்பட்டு, கிட்டத்தட்ட ஆறு மாடி உயரத்திற்கு நீர் பீய்ச்சியடித்தது. பிற்பகல் 2.15 மணியளவில் கசிவு சரிசெய்யப்பட்டு, தண்ணீர் விநியோகம் சீரமைக்கப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் வண்டி மூலமும் தண்ணீர்ப் பைகள் மூலமும் நீர் விநியோகிக்கப்பட்டது. அந்தப் பணியை மேற்கொண்டவர்களில் பொத்தோங் பாசிர் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீத்தோ யி பின்னும் அடித்தளத் தலைவர்களும் அடங்குவர். புளோக் 101, 102ஐச் சேர்ந்த கிட்டத்தட்ட 90 வீடுகள் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார் திரு சீத்தோ. ஒப்பந்த தாரர் ஒருவர் அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டப் பணிகளுக்காக குழாய் ஒன்றை உடைத்தபோது நீர்க்கசிவு ஏற்பட்டதாக நம்புவதாகவும் அவர் கூறினார். நீர்க்கசிவுக்கான காரணம் பற்றி பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரித்து வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்