மரினா பேயில் புத்தாண்டையொட்டி போலிஸ் தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. அங்கு புத்தாண்டுக்கு முதல் நாள் வாண வேடிக்கைகளைக் காணச் செல் லும் மக்கள், ஆகாயத்தில் போலி சின் ஆளில்லாத வானூர்திகளை யும் பார்க்கலாம். மரினா பே சிங்கப்பூர் புத் தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிக்காக இந்த ஆண்டு சுமார் 700 போலிஸ் அதிகாரிகள் பணியில் இருப்பார் கள். இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பலவும் அங்கு நடக்கவிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அளவுக்கு போலிஸ் அதி காரிகள் அங்கு பணியில் அமர்த் தப்பட்டு வந்திருப்பதாக மத்திய போலிஸ் பிரிவின் தளபதி துணை உதவி ஆணையர் கிரிகெரி டான் தெரிவித்தார். இருந்தாலும் இந்த ஆண்டு போலிஸ் படை புதிய தொழில்நுட் பங்களைப் பயன்படுத்துகிறது. அந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சி களில் கலந்துகொள்ளும் ஆயிரக் கணக்கான மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் போலிசின் ஆளில்லாத வானூர்திகளும் முக் கிய பங்காற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.
புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி பலத்த பாதுகாப்பு; சேவையில் வானூர்திகள்
1 mins read
-

