தியோங் பாரு நான்கறை வீடுகள் $1 மி. கடந்தன

தியோங் பாரு நான்கறை வீடுகள் $1 மி. கடந்தன

2 mins read
81406094-c2ea-48c0-9614-3adda4fc8f78
-

தியோங் பாரு வட்டாரத்தில் நான்கறை வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிக மாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த செப்டம்பர் மாதத் திலிருந்து குறைந்தது அத்தகைய நான்கு பரிவர்த்தனைகள் பதிவாகி உள்ளன. அவை அனைத்தும் தியோங் பாருவில் ஒரே குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள வீடுகள். விற்பனை செய்யப்பட்ட அந்த வீடுகள் பூன் தியோங் சாலையில் உள்ள 40 மாடி கட்டடங்களில் உள்ளன. தியோங் பாரு சிங்கப்பூரின் ஆகப் பழைய வீடமைப்புப் பேட்டைகளில் ஒன்று. இருப்பினும், ஒரு மில்லிய னுக்கும் அதிகமாக விற்கப்பட்ட நான்கு வீடுகள் புதியவை. வீட்டு உரிமையாளர்கள் குடிபுகுந்து மூன்று ஆண்டுகள்கூட ஆக வில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டு மொத்த மறுமேம்பாட்டுத் திட்டத் தின்கீழ் இந்த வீடுகள் கட்டப் பட்டன.

இத்தகைய வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் வீடு களைத் தேர்ந்தெடுத்து ஏழு ஆண்டுகளில் அவற்றை விற்க லாம். தற்போது ஏறத்தாழ 96 ஆண்டுகள் குத்தகைக் காலம் எஞ்சியிருக்கிறது. நீண்ட குத்தகைக் காலம், முதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வட்டாரம், உயர்மாடி வீடுகள் (34வது மாடியிலிருந்து 39வது மாடி வரை) ஆகியவை வீடுகள் அதிக விலைக்கு விற்பனையாக காரணங்களாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். விற்பனை செய்யப் பட்ட நான்கு வீடுகளுக்கு எதிர் புறத்தில் தியோங் பாரு எம்ஆர்டி நிலையம், தியோங் பாரு பிளாசா கடைத்தொகுதி, இதர வசதிகள் ஆகியவை உள்ளன. அந்த நான்கு வீடுகளின் விற்பனை விலை $1 மில்லிய னிலிருந்து $1.018 மில்லியன் வரை ஆகும்.