புத்துணர்வுடன் 2019க்குள் அடியெடுத்து வைக்கிறோம்

புத்துணர்வுடன் 2019க்குள் அடியெடுத்து வைக்கிறோம்

1 mins read
0a03da95-dd35-4f90-90ce-2cc367c80c5e
-

கடந்த ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 3.3 விழுக்காடு வளர்ச்சி கண்டதாகப் பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டு செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கும் அதிகம் என்றார் அவர். 2017ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சி 3.5 விழுக்காடாக இருந்தது. அத் துடன் கடந்த ஆண்டின் பொரு ளியல் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது அவ்வளவு வித்தியாசம் இல்லை என்று பிரதமர் லீ கூறினார்.

இவ்வாண்டு நாட்டின் பொரு ளியல் 1.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடு வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு லீ தெரிவித்தார். ஆனால், மோசமடைந்து வரும் வர்த்தகப் பூசல்கள், நிதிச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், மெதுவடையும் வளர்ச்சிக்கான அறிகுறிகள் ஆகியவற்றால் உலகளாவிய பொருளியல் பெரும் நிலை யற்றதன்மையை எதிர்நோக்கு வதாக அவர் எச்சரிக்கை விடுத்தார். இத்தகைய சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூரில் நீண்டகாலக் கொள்கைகளும் நாட்டை வழிநடத்திச் செல்ல வலிமைமிக்க குழுவும் இருப்ப தாக தெரிவித்த திரு லீ, இவற்றின் விளைவாக சிங்கப்பூர் தனது எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கலாம் என்று கூறி னார். தலைமைத்துவ மாற்றம் தொடர் பாகக் கடந்த ஆண்டில் குறிப் பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக் கப்பட்டதாக திரு லீ குறிப்பிட்டார்.