பொருளியல் சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் 2017ஆம் இறுதிக் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.2 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததாக நேற்று வர்த்தக, தொழில் அமைச்சு தகவல் வெளியிட்டது. இது பொருளியல் நிபுணர்கள் கணித்த 2.5 விழுக்காடு வளர்ச் சியைக் காட்டிலும் சற்று குறை வாக உள்ளது. மொத்தத்தில் 2018ஆம் ஆண்டு முழுவதுக்குமான பொருளியல் வளர்ச்சி 3.3 விழுக் காடு ஏற்றம் கண்டது. ஆனால் பிரதமர் லீ சியன் லூங் முன்பே அறிவித்ததுபோல் பொருளியல் வளர்ச்சி 2017ஆம் ஆண்டில் 3.6 விழுக்காடாக இருந்து இப்போது சற்றே சரிந்து உளது.
சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்த 3.5 விழுக் காடு பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் நான்காம் காலாண்டில் மெதுவடைந்து 1.6 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி இருந்தது. உற்பத்தித் துறை 2017ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுப் பகுதியில் அடைந்த 3.7 விழுக் காட்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகை யில் சென்ற காலாண்டில் 5.5 விழுக்காடு உயர்ந்தது. இவ்வளர்ச்சி பெரும்பாலும் உயிர்மருத்துவ உற்பத்தி, மின் னியல் குழுமங்கள் ஆகியவற்றின் விரிவாக்கத்தால் ஏற்பட்டது. கட்டுமானத் துறை தொடர்ந்து தொய்வு கண்டது. இரு ஆண்டுகளுக்கு முந் தைய இறுதிக் காலாண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற காலாண் டில் 2.2 விழுக்காடு சரிவு ஏற்பட் டது. சென்ற மூன்றாம் காலாண் டின் அதே 2.5 விழுக்காடு சரிவு நான்காம் காலாண்டிலும் தொடர்ந் தது.

