கடல் அன்னையின் அழகையும் கடலோரத்தில் அமைந்துள்ள செந்தோசா தீவின் அழகையும் ரசித்தவாறே புத்தகங்கள் மூலம் அறிவையும் பெருக்கிக்கொள்ள வாய்ப்புத் தருகிறது 'லைப்ரரி@ ஹார்பர்ஃபிரன்ட்' நூலகம். விவோசிட்டி கடைத்தொகுதி யின் மூன்றாம் தளத்தில் 3,000 சதுரமீட்டர் பரப்பளவில் அமைந்து இருக்கும் இந்நூலகம் இம்மாதம் 12ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. சிங்கப்பூரில் உள்ள கடைத் தொகுதிகளில் அமைந்துள்ள நூலகங்களிலேயே இதுதான் ஆகப் பெரியது.
கடற்புறத்தைக் கருப்பொரு ளாகக் கொண்டு, நூலகம் முழு வதும் நீலம், பச்சை நிறங்களி லேயே காட்சியளிக்கிறது. கிட்டத்தட்ட 200,000 புத்தகங் களைக் கொண்ட இந்நூலகத்தில் ஒரே நேரத்தில் 460 பேர் அமர்ந்து வாசிக்க முடியும். சத்தத்தைக் கட்டுப்படுத்தவும் நெரிசலைச் சமாளிக்கவும் உத வும் வகையில் பெரியவர்கள், குழந்தைகள் என தனித்தனிப் பிரிவுகளை இந்த நூலகம் கொண்டுள்ளது. சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் திறன்களையும் பாலர் பருவ எழுத் தறிவுத் திறன்களையும் குழந்தை கள் வளர்த்துக்கொள்ளும் வகை யில் 'தி டிங்கர் டிரக்' எனும் பிரத்தியேக வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
குழந்தைகள் அங்கு காகிதங் களைக் கொண்டு கைவினைப் பொருட்களைச் செய்யலாம்; சொற்புதிர்களுக்குச் சொந்தமாக விடைகாண முயலலாம்; விண் வெளி, விலங்குகள், உடல்நலம் உள்ளிட்ட தலைப்புகளில் உள்ள, 'ஆக்மென்டட் ரியாலிட்டி' எனும் கணினித் தொழில்நுட்பத்தின் மூலம் புத்தகங்களை வாசித்து மகிழலாம். பெற்றோர்கள் 'கியூ ஆர்' குறியீடு துணையுடன் பிரத் தியேக கைபேசிச் செயலி மூலம் அப்புத்தகங்களைத் திறக்கலாம். பெரியவர்கள் மின்னிலக்க, இணைய வளங்களைப் பயன் படுத்தி தங்களது திறன்களை மேம்படுத்த உதவும் வகையில் ஆறு கற்றல் கணினிகள் நிறுவப் பட்டுள்ளன. பெரியவர்களுக்கான பகுதி தொண்டூழியர்களால் நடத்தப் படும்.
புக்கிட் மேரா சென்ட்ரலில் இருந்த புக்கிட் மேரா பொது நூலகத்திற்குப் பதிலாக இந்தப் புதிய நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. புக்கிட் மேரா பொது நூலகம் கடந்த நவம்பர் 30ஆம் தேதி மூடப்பட்டது.

