மாணவர்களின் நற்பண்புகள்: பிரதமர் லீ வலியுறுத்து

மாணவர்களின் நற்பண்புகள்: பிரதமர் லீ வலியுறுத்து

2 mins read
2cd275eb-abc5-4c3e-abc3-c71c063b8ef4
-

சிங்கப்பூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாழ்வதற்குத் தேவையான திறன்கள் மட்டு மின்றி அவர்களின் குணநலன் களையும் நற்பண்புகளையும் வளர்ப்பதற்குத் தேவையான திறன்களும் கற்றுக்கொடுக் கப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். "நமது குடியரசின் வெற்றி நடை தொடரவேண்டுமானால் சிங்கப்பூரர்கள் நன்கு கற்றுத் தேர்ந்த குடிமக்களாக மட்டுமல் லாது சிறப்பாகப் பயிற்சிபெற்ற ஊழியர்களாகவும் இருக்க வேண்டும். "அத்துடன் அத்தியாவசிய மான நற்பண்புகளை அவர்கள் பெற்றிருத்தல் அவசியம்," என் றார் திரு லீ. டவுன்ஸ்வில் தொடக்கப் பள்ளியில் நேற்று உரை நிகழ்த் திய பிரதமர், கல்வி முறையில் அண்மையில் மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களை ஆதரிக்கு மாறு பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டார்.

கல்வி அமைச்சின் எடுசேவ் விருது பெற்ற 242 மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தி னர் மத்தியில் பிரதமர் லீ உரை யாற்றினார். "நமது மாணவர்கள் உல கத்தைப் புரிந்துகொள்வதோடு தேசிய உணர்வையும் சமூ கத்தைப் பற்றிய தெளிவையும் பெறுவது அவசியம். "உலகின் இன்னல்களை வெற்றிகொள்ளுதல், நம்மை நாமே சார்ந்திருத்தல், வளப்பத் தையும் செழிப்பையும் அடைதல் ஆகியவற்றுக்கான மீள்திறனை யும் தீர்மானத்தையும் மாண வர்கள் கொண்டிருக்க வேண்டும். "இவற்றைப் பெற பள்ளியில் கற்றுக்கொண்ட மொழி, அறிவி யல், கணிதம், பொருளியல், வர லாறு போன்றவை தொடர்பான அறி வாற்றலை மட்டும் சார்ந்திருப்பது போதாது. "சக வகுப்பு மாணவர்கள், சக குடிமகன்கள் ஆகியோர் நலனில் அக்கறை காட்டக்கூடிய பொது நலனுக்குப் பங்களிக்கத் தயாராக இருக்கக்கூடிய அத்தியாவசிய நற் பண்புகளை மாணவர்கள் பெற்றி ருத்தல் வேண்டும். அதுவே நமது நாட்டுக்குப் பெருமை," என்றார் பிரதமர். இந்த வார இறுதியில் டெக் கீ வட்டாரத்தில் வசிக்கும் 1,100க்கு மேற்பட்ட மாணவர்கள் டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழு கல்வி உதவிநிதி விருதுகளையும் கல்வி அமைச்சின் எடுசேவ் விருதுகளையும் பெறுகின்றனர்.

கல்வி உதவிநிதி விருதுகள் குறைந்த வருமானக் குடும்பங் களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோல $100 முதல் $500 வரையிலான கல்வி அமைச்சின் எடுசேவ் விருதுகள் கல்வி மற்றும் கல்விசாரா அம்சங்களில் தலை சிறந்து விளங்கும் மாணவர்களைக் கௌரவிக்க வழங்கப்படுகின்றன. கல்வி முறையில் செய்யப்பட் டுள்ள மாற்றங்கள் மாணவர்களுக் கான கற்றலை அதிக அர்த்தமுள் ளதாக்கும் என்று தெரிவித்தார் அங் மோ கியோ குழுத் தொகு நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லீ.

கல்வித் தேர்வு முடிவுகளின் மீதான முக்கியத்துவத்தை குறைத் தல், பாடப்புத்தகத்தில் உள்ளவற் றுக்கும் உலகின் இயல்புக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத் தும் மாணவர்களுக்கு உதவுதல் போன்ற அம்சங்களை உள்ளடக் கியவை அந்த மாற்றங்கள். மாற்றங்களுக்கான அவசியம் குறித்து விளக்கிய பிரதமர், "வருங்காலப் பொருளியலுக்கு நமது மாணவர்களைத் தயார்ப் படுத்தும் விதமாக 'வாழ்க்கைக் கான கற்றல்' என்பதன் மீதான நாட்டத்தை இளம் சிங்கப்பூரர்களி டத்தில் விதைக்கவேண்டும்," என் றார். மேலும், அரசாங்கம் சாதிக்க முயல்வதைப் புரிந்துகொண்டு அதன் நோக்கத்தை ஆதரிக்குமாறு பெற்றோர்களை திரு லீ கேட்டுக் கொண்டார்.