அண்டை நாடுகளுடன் இணக்கம், நல்லுறவு: பிரதமர் லீ வலியுறுத்து

அண்டை நாடுகளுடன் இணக்கம், நல்லுறவு: பிரதமர் லீ வலியுறுத்து

1 mins read
dc8ca2f5-0258-444f-b727-0e7c9beb5e47
-

சிங்கப்பூர் தனது அண்டை நாடுகளை அணுகும் முறை குறித்தும் அவற்றுடன் நல்ல உறவுமுறைகளைப் பேணுவது குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தனது சொந்த நலன் களையும் சிங்கப்பூர் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று திரு லீ வலியுறுத்தியுள்ளார். அண்டை நாடுகளுடன் சிங்கப்பூர் நல்ல நட்புறவு கொண்டிருக்கிறது என்ற பிரதமர், இருந்தாலும் அவ்வப்போது பிரச்சினைகளும் விவகாரங்களும் எழக்கூடும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

தெக் கீயில் நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது அவர் இவ்வாறு பேசினார். மிகவும் சிக்கலான இந்த உலகில் சிங்கப்பூர் அமைதியான ஓர் இடமாகத் திகழ் கிறது என்ற அவர், அதேவேளையில் வாழ் வதற்கு தென்கிழக்காசியா ஒரு சிக்கலான இடமாக இருக்கிறது என்றும் சொன்னார். "நமது அண்டை நாடுகள் ஒவ்வொன்றையும், அந்நாடுகளின் மக்களையும் எவ்வாறு அணுக வேண்டும், அவர்களுடன் நல்லுறவைப் பேணுவது எப்படி, அவர்களுடன் ஒத்துழைப்பது எவ்வாறு போன்றவை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். "அதே நேரத்தில் நமது சொந்த நலன் களுக்கு முன்னுரிமை அளித்து, நாட்டிற்காக அணிதிரள வேண்டும்," என்று பிரதமர் லீ அறிவுறுத்தினார்.