எந்தப் பொருளையும் வீணாக்காத நாடு என்ற நிலையை எட்ட வேண்டுமானால் சிங்கப்பூர் அதன் வளங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மச கோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள் ளார். அவ்வாறு செய்வதன் மூலம் உள்ளூர் வர்த்தகர்களுக்குப் புதிய பொருளியல் வாய்ப்புகளையும் சிங் கப்பூரர்களுக்கு வேலைகளையும் பெற்றுத்தர முடியும் என்றார் அவர். 'வீணாக்காத நிலையை நோக் கிய சிங்கப்பூரின் ஆண்டு' என் னும் பிரசார நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் பேசினார். 'அவர் தெம்பனிஸ் ஹப்' கட்ட டத்தில் நேற்றுக் காலை இந்நிகழ்வு நடைபெற்றது. பொருட்களை வீணாக்காமல் இருப்பது, பொன்னான வளங் களைக் கட்டிக்காப்பது ஆகியன தொடர்பில் விழிப்புணர்வைத் தோற்றுவிக்க இந்த ஓராண்டு பிரசார இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
வீணாக்காத நிலையை எட்ட முயற்சிகள் வேண்டும்: மசகோஸ்
1 mins read
-

