'பிணைப்பை வலுப்படுத்த உதவும் சமூக மன்றங்கள்'

'பிணைப்பை வலுப்படுத்த உதவும் சமூக மன்றங்கள்'

1 mins read
276c6971-7bc5-4072-850e-58c710e13c3f
-

சிங்கப்பூரில் குடியிருப்பாளர்கள் சந்தித்து, நண்பர்களாக பிணைப்பை வலுப்படுத்திக் கொள்ள உதவும் சமூக மன்றங்கள் மிகவும் சிறப்பான பங்கை ஆற்றுகின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். அதனால்தான் ஒவ்வொரு வீடமைப்புப் பேட்டை யிலும் சமூக மன்றங்கள் உள்ளன என்றார் அவர். டெக் கீ சமூக மன்றம் மேம்படுத்தப்பட்ட பிறகு, நேற்று நடைபெற்ற அதிகாரபூர்வத் திறப்பு விழாவில் திரு லீ இவ்வாறு குறிப்பிட்டார். "தங்களது இரண்டாவது வீடு என்று அழைக்குமளவுக்கு நெருக்கமாக குடியிருப்பாளர் களுக்கு எப்போதும் ஓர் இடம் வேண்டுமென்பதாலேயே சமூக மன்றங்களைக் கட்டுவது, மேம்படுத்துவது ஆகியவற்றில் அரசாங்கம் பெரியளவில் முதலீடு செய்கிறது," என்றார் அவர்.