கலந்துறவாடி கதை சொல்லி தமிழ்ப் போதிக்கும் செயலி

கலந்துறவாடி கதை சொல்லி தமிழ்ப் போதிக்கும் செயலி

1 mins read
7f0578cd-ae48-4f32-adaf-fd9ce4949b92
'கனியும் மணியும்' என்ற இலவச தமிழ் கலந்துறவாடல் கதைச் செயலியை நேற்று லிட்டில் இந்தியாவில் நடந்த பொங்கல் விழாவில் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவர் திரு விக்ரம் நாயர் வெளியிட்டார். கல்வி அமைச்சின் தாய்மொழிகள் பிரிவின் இயக்குநர் ஹெங் போய் ஹொங் (சேலையில்) உடன் இருக்கிறார். பாலர்கள், தொடக்- கப் பள்ளி முதல், இரண்டாம் வகுப்பு- களைச் சேர்ந்த மாணவர் களுக்காகவும் பெற்றோருக்காகவும் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய செயலி இது. படம்: திமத்தி டேவிட் -

வைதேகி ஆறுமுகம்

தமிழில் வாசிக்கும் நாட்டத்தைச் சிறார்களிடம் வளர்க்க உறு துணையாக கனியும் மணியும் மின்னூல் செயலி வடிவில் வருகை தந்து இருக்கிறார்கள். தமிழை வாசிக்கத் தெரியாத பிள்ளைகளுக்குச் சொற்களை அறிமுகப்படுத்தும் வகையில், 'கனியும் மணியும்' என்ற அந்த மின்னூல் செயலியில் தெளிவான குரலில் கதைகளைக் கேட்கலாம். குழந்தைகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் வகையில் அசைவுப் படங்களுடன் இக் கதைகள் உள்ளன. கல்வி அமைச்சின் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு- வின் தலைவரான திரு விக்ரம் நாயர், சிறுவர்களுக்கான ஆறு தமிழ்ச் சிறுகதைகளைக் கொண்டுள்ள இம்மின்னூல் செயலியை நேற்று வெளியிட்டார்.