பேருந்து-லாரி மோதல்: 13 பயணிகள் காயம்

பேருந்து-லாரி மோதல்: 13 பயணிகள் காயம்

1 mins read
22884341-2658-4176-856c-7e1284b0e43b
-

சிங்கப்பூரின் பைனியர் ரோட்டில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த விபத்தில் 13 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையிலும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை யிலும் அனுமதிக்கப்பட்டதாக போலிசார் கூறினர். கொள்கலன் லாரியுடன் பேருந்து மோதியதால் பேருந்தில் இருந்தவர்கள் காயமடைந்தனர். துவாஸ் கிரசென்டை நோக்கிய சாலையில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக தங்களுக்கு மாலை 5.12 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். 13 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் பேருந்து ஓட்டுநர் காயமின்றித் தப்பிய தாகவும் நம்பப்படுகிறது.

லாரிக்கு முன்னால் சென்றுகொண் டிருந்த வாகனம் திடீரென்று நின்றதால் லாரி ஓட்டுநரும் தமது வாகனத்தை சட்டென்று நிறுத்த நேரிட்டது. அதன் விளைவாக, பின்னால் வந்துகொண்டு இருந்த பேருந்து, லாரி மீது மோதியது. இந்த எதிர்பாராத விபத்தின் காரணமாக பேருந்தின் முன்பக்கம் பலமாகச் சேதமடைந்தது. அதன் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்ததைக் காட்டும் படம் ஒன்றை சீன நாளிதழான '‌ஷின் மின்'னின் வாசகர் ஒருவர் அனுப்பி இருந்தார். அவ்வழியாகக் கடந்து சென்று கொண்டு இருந்த ஒருவர் விபத்தை அறிந்ததும் முதலுதவி செய்ய முன்வந்த தாக உதவியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் '‌ஷின் மின்'னிடம் கூறினார். விபத்து குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.