அழகு பராமரிப்புக் கடை நிர்வாகி ஒருவர் அவரது இல்லப் பணிப்பெண்ணை பல மாதங்களாக துன்புறுத்தி வந்தார். சலவைத்தூள் கலக்கப்பட்ட அழுக்கு நீரைக் குடித்தல், கொதிக்கும் தண்ணீரைத் தம்மீது ஊற்றிக்கொள்ளுமாறு வலுக்கட்டாயப்படுத்தி சுயமாக தம்மைக் காயப்படுத்திக்கொள்ள வைத்தார் அப்பணிப்பெண்ணின் முதலாளி. நீதிமன்றத்தில் 15 நாள் விசாரணைக்குப் பிறகு பணிப்பெண் பியு பியு மாரை துன்புறுத்தி யதாக அவரது முதலாளி லின்டா சியா லெய் சியே குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சியாவுக்கு நேற்று மூவாண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. பணிப்பெண்ணுக்கு இழப்பீட்டு தொகையாக $11,800ஐ செலுத்த வேண்டும் என்றும் சியாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்தொகையை அவரால் செலுத்த முடியாவிட்டால் கூடுதலாக ஆறு வாரச் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப் படும். "இல்லப் பணிப்பெண் துன்புறுத்தப்படும் செயலை, அவரது பணி மீது நிலவும் அதிருப்தியை வைத்து ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது," என்று மாவட்ட நீதிபதி ஒலிவியா லோ கூறினார். பணிப்பெண்ணைத் தாக்கியதாக ஐந்து குற்றச்சாட்டுகளையும் மாசுபட்ட தண்ணீரைக் குடிக்க வைத்ததாக ஒரு குற்றச்சாட் டையும் ஜனவரி 18ஆம் தேதி சியா ஒப்புக்கொண்டார். பணிப்பெண்ணைத் தாக்கியதாக சியாவின் கணவர் லிம் தூன் லெங்கிற்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பணிப்பெண்ணுக்கு இழப்பீடாக $500 செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. சிங்கப்பூரர்களான இத்தம்பதிக்கு, ஐந்து வயது மகள் உள்ளார். பொங்கோலில் உள்ள அவர்களது வீட்டில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களுக்கு இடையில் மேற்கண்ட குற்றங்களைப் புரிந்தனர். இத்தம்பதியிடம் பணிபுரிந்த காலம் முழுவதும் மாதச் சம்பளமான $700ஐ அப்பணிப்பெண் பெறவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. போதிய உணவு வழங்கப்படாததால் அவரது உடல் எடை 50 கிலோகிராமிலிருந்து 38 கிலோகிராமுக்கு குறைந்தது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து அக்டோபர் மாதம் வரை சியாவிடம் அப்பணிப்பெண் பணிபுரிந்ததாக தெரிவிக்கப் பட்டது. இந்தச் சம்பள விவகா ரத்தில் மனிதவள அமைச்சு தலையிட்ட பிறகுதான் அப்பணிப்பெண்ணுக்கு முழுச் சம்பளமும் வழங் கப்பட்டதாக அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியவருக்கு மூவாண்டு சிறை
2 mins read
லின்டா சியா லெய் சியேவுக்கு மூவாண்டு சிறைத் தண்டனையும் அவரது கணவர் லிம் தூன் லெங்கிற்கு ஆறு வார சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

