சிங்கப்பூருக்கு வரும், இங்கிருந்து செல்லும் அனைத்து 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்களும் சேவையிலிருந்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. எத்தியோப்பியன் ஏர்லைன்சின் இதே ரகத்தைச் சேர்ந்த 'போயிங் 737 மேக்ஸ் 8' விமானம் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 157 பேரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங் களுக்காக இந்த முடிவை ஆணையம் எடுத்துள்ளது. இந்த ரக விமானச் சேவை தடை நேற்று பிற்பகல் 2 மணிக்கு நடப்புக்கு வந்தது. இதே ரகத்தைச் சேர்ந்த ஆறு விமானங்களைச் செயல்பாட்டில் வைத்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன் சின் (எஸ்ஐஏ) துணை நிறுவன மான சில்க்ஏர் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரி விக்கப்பட்டது. ஆனால், 'போயிங் 737-800' ரகத்தைச் சேர்ந்த 17 விமானங் களுக்கு பாதிப்புக் கிடையாது என்று எஸ்ஐஏ குறிப்பிட்டது. தற்போது 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்கள் பெங்களூரு, ஹைதராபாத், காத்மாண்டு, கோலாலம்பூர், பினாங்கு, புக்கெட், புனோம் பென், டார்வின், ஹிரோஷிமா உள்ளிட்ட நகர்களுக்குச் சேவை புரிகின்றன. சேவைத் தடையால் பாதிக்கப் படும் பயணிகளைத் தனது நிறு வனம் தொடர்புகொள்ளும் என்று எஸ்ஐஏ கூறியது.
சிங்கப்பூர்: 'போயிங் 737 மேக்ஸ்' விமானங்கள் சேவை நிறுத்தம்
1 mins read
சாங்கி விமான நிலையத்தில் நேற்று காணப்பட்ட சில்க்ஏர் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

