மும்பையிலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சாங்கி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை பாதுகாப்பாகத் தரையிறங்கியது. குண்டுவெடிப்பு மிரட்டல் தொடர்பான எச்சரிக்கையை விமானி வெளியிட்டபோதும் அந்த மிரட்டல் போலியானது என்று பிறகு உறுதி செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் இரண்டு போர்விமானங்கள் 'எஸ்கியூ 423' விமானத்தைப் பாதுகாப்பாக சாங்கி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றன. அந்த விமானங்கள் காலை 8 மணிக்குத் தரையிறங்கின.
குழந்தையுடன் இருந்த ஒரு பெண்ணைத் தவிர அனைத்து பயணிகளும் பாதுகாப்பாகத் தரையிறங்கினர். அவர்கள் சோதிக்கப்பட்டு பின்னர் தங்கள் வழியில் சென்றனர். சம்பவம் குறித்து அந்தப் பெண்ணும் அவரது குழந்தையும் விசாரணைக்காகத் தடுக்கப்பட்டனர்.
இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 11.35 மணிக்கு இந்த விமானம் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகப் போலிசார் தெரிவித்தனர். விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாக அழைத்தவர் கூறினார்.
"மும்பையிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட 'எஸ்கியூ 423' விமானத்தில் வெடிகுண்டு இருந்ததை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உறுதி செய்தது. அதிகாரிகளின் விசாரணைகளுக்கு நாங்கள் உதவி வருகிறோம். இதுபற்றி மேற்கொண்டு எந்த விவரமும் கூற இயலாததற்காக நாங்கள் வருந்துகிறோம்," என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பேச்சாளர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார்.