நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட நகர பெருந்திட்ட வரைவில் சிங்கப்பூரை பசுமையாக வும் விரிவாக்குவதற்கு மான திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. வடக்கு கடற்கரைப் பகுதியில் 50 கிலோ மீட்டர் தூரத் துக்கு புதிய 'கிரேட்டர் ரஸ்டிக் கோஸ்ட்' எனும் பாதை, மத்திய வர்த்தக வட்டாரத்தில் (சிபிடி) நிலத்தடி வசதி ஆகியவற்றை அமைப்பதற்கான திட்டங்களை அது விளக்கியது. இந்தப் பெருந்திட்டம் அடுத்த 15 ஆண்டுகளில் சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கு நிலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து வழிகாட்டும் சட்டபூர்வமான திட்ட மாகும். ஐந்தாண்டுக்கொரு முறை அது மறுஆய்வு செய்யப்படும். ஆர்ச்சர்ட் ரோடு உள்ளிட்ட மத்திய பகுதிகளை வனப்புறச் செய்வது, கூடுதலாக 1,000 ஹெக்டர் பரப்பில் பூங்காங்கள், பூங்கா இணைப்புகளை உருவாக்கி சிங்கப்பூரின் ரயில் பாதையுடன் 2021ஆம் ஆண்டுக்குள் இணைத் தல் ஆகிய திட்டங்களும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. மரினா பே, ஜூரோங் புத்தாக்க வட்டாரம், பொங்கோல் மின் னிலக்க வட்டாரம் என வட்டார அளவில் இடம்பெறவுள்ள நிலத்தடி பெருந்திட்ட வரைவுகளையும் நகர மறுசீரமைப்பு ஆணையம் முதல் முறையாக நேற்று வெளியிட்டது. மக்கள் சார்ந்த பயன் பாடுகளுக்கு அதிகமான நிலப் பகுதியை ஒதுக்கவும் நாட்டை அகலப்படுத்தவும் இந்த திட்டங்கள் உதவும்.
50 கி.மீ. கரையோர பெருந்திட்டம்
1 mins read
பெருந்திட்ட வரைவு 2019ன் தொடர்பில் நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏற்பாடு செய்த கண்காட்சியில் ஆர்ச்சர்ட் சாலையின் மறுசீரமைப்பு குறித்து அதிகாரிகள் விளக்கியதை அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் அதிகாரிகளும் பார்வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

