உணவங்காடிக் கலாசாரம்: விண்ணப்பம் சமர்ப்பிப்பு

உணவங்காடிக் கலாசாரம்: விண்ணப்பம் சமர்ப்பிப்பு

1 mins read
67f23332-e151-4d57-b29b-020753d5f23e
-

ஐக்கிய நாட்டு கல்வி, கலாசார, அறிவியல் மன்றத்தின் (யுனெஸ்கோ) தொட்டுணர முடி யாத கலாசார மரபுடைமைப் பட்டி யலில் சிங்கப்பூர் உணவங்காடிக் கலாசாரத்தை இடம்பெறச் செய் வதற்கான விண்ணப்பம் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் சமூகத் தின் ஆதரவுக் கடிதங்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவையும் இணைக்கப்பட்டு உள்ளன. இந்திய முஸ்லிம் உணவுக் கடைக்காரர் ஒருவர் பிரியாணி சமைப்பது, சீன உணவுக்கடைக் காரர் ஒருவர் சிக்கன் ரைஸ் சமைப்பது எப்படி என்பதை விளக்குவது, தந்தை ஒருவர் தம் குழந்தைகளுடன் செண்டோல் பானத்தைச் சுவைப்பது போன்ற புகைப்படங்களும் அவற்றுள் அடங்கும். சிங்கப்பூரின் உணவங்காடிக் கலாசாரத்தைச் சிறப்புற விளக் கும் பத்து நிமிடக் காணொளியும் 12 உறுப்பினர்களைக் கொண்ட யுனெஸ்கோ மதிப்பீட்டுக் குழு விடம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய சுற்றுப்புற வாரியம், சிங் கப்பூர் வணிகர் சங்கக் கூட்ட மைப்பு ஆகிய மூன்று அமைப்பு கள் அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளன. இவ்வாண்டு ஜூலை மாதத் தில் அவ்விண்ணப்பமும் உடன் இணைக்கப்பட்ட ஆவணங்களும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.