டாக்கா தீ விபத்து; அதிகரிக்கும் மரண எண்ணிக்கை

டாக்கா தீ விபத்து; அதிகரிக்கும் மரண எண்ணிக்கை

1 mins read
d1b2cb73-7d9e-4a06-a4f1-2dcd6d1ab7e4
-

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள உயர்மாடிக் கட்டடம் ஒன்றில் மூண்ட தீயில் குறைந்தது 19 பேர் மாண்டுள்ளதாக அண்மைய தகவல்கள் கூறுகின்றன.

தீயில் எரிந்துபோன அந்தக் கட்டடத்திலிருந்து மக்களை மீட்கும் பணிகள் மும்முரமாகத் தொடர்கின்றன. ஹெலிகாப்டர்கள், ஏணிகள் ஆகியவற்றைக் கொண்டு அதிகாரிகள் 100க்கும் அதிகமானோரைக் காப்பாற்றியதாக தீயணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தீயிலிருந்து தப்பிக்க முயன்ற குறைந்தது ஆறு பேர், 22 மாடிகளைக் கொண்ட கட்டடத்திலிருந்து கீழே குதித்து மாண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.