அனுமதிக்கப்படாத இடங்களில் புகைபிடிப்போருக்கு அபராதம்

அனுமதிக்கப்படாத இடங்களில் புகைபிடிப்போருக்கு அபராதம்

2 mins read
3588ae43-46af-4bba-b8ee-4f742d6c3e6f
படம்: பூன் சியான் ஹுவெய், இன்ஸ்டகிராம் -
Google News Preferred Icon

ஆர்ச்சர்ட் சாலையில் புகைப்பிடிக் கக்கூடாத இடங்களில் புகைப்பிடிப் போருக்கு எதிராக நாளை மறு தினம் முதல் அமலாக்க நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரி வித்துள்ளது. ஆர்ச்சர்ட் சாலையில் குறிப் பிட்ட சில இடங்களில் மட்டுமே புகைபிடிப்பதற்கு அனுமதி உண்டு. அவற்றைத் தவிர்த்து பெரும் பாலான மற்ற இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்பதன் தொடர்பில் ஆலோசனை வழங்கப் பட்டிருந்த மூன்று மாத கால அவகாசம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து பொது இடங்களில் புகைபிடிப் போர் அதிகாரிகளிடம் பிடிபட்டால் அபராதமாக $200 செலுத்த வேண்டியிருக்கும். அதைச் செலுத்த தவறினால் நீதிமன்றத்தில் $1,000 வரை அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். புதிய சட்டத்திற்கு ஒத்துப்போக பொதுமக்களுக்கு போதிய அவ காசம் கொடுக்கவே மூன்று மாத காலம் வழங்கப்பட்டதாக வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் நடுப்பகுதி வரை வாரியம் வழங்கிய அறிவுரைகளின் எண்ணிக்கை 70 விழுக்காட்டிற்கு மேல் குறைந்துள்ளது. ஜனவரியின் முதல் வாரத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,900 அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால் இம்மாத நடுப்பகுதியில் அந்த எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 550ஆக குறைந் தது. அனுமதிக்கப்படாத இடங்களில் புகைபிடிப்போருக்கு இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து வாய்ச் சொல் அறிவுரைகளுக்குப் பதிலாக எழுத்துபூர்வ அறிவுரைக் கடிதங் களை வாரியம் வழங்கத் தொடங் கியது. வாரியத்தின் இந்த நடவடிக் கையைத் தொடர்ந்து அறிவுரை களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 87ஆக குறைந்தது. தடை செய்யப்பட்டுள்ள இடங் களில் புகைபிடித்தோரில் பெரும் பாலானோர் வாரிய அதிகாரிகள், தொண்டூழியர்கள் வழங்கிய அறி வுரையை நல்ல எண்ணத்தோடு ஏற்றுக்கொண்டதாக வாரியம் சொன்னது. இதன் தொடர்பில் ஜனவரி யிலிருந்து மார்ச் வரை 539 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆர்ச்சர்ட் சாலையில் புகைபிடிப்போர் விடும் புகையைச் சுவாசிக்கும் சம்பவங்கள் குறைந்து இருப்பதாக 82 விழுக்காட்டினர் கூறியிருப்பதை வாரியம் சுட்டியது.