வெறுப்புணர்வுப் பேச்சுக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அத்தகைய பேச்சு கடுமையாக அணுகப்பட்டு, அதற்கெதிராக விரைந்து நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் இந்த அணுகுமுறையைக் குறைகூறி, 'பேச்சுரிமைக்கு உன்னத எடுத் துக்காட்டாக' திகழும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிலர் கூறி வரும் வேளை யில், சிங்கப்பூர் வேறு பாதையைத் தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார். "வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சை மெத்தனமாக எடுத்துக்கொண்டால் அதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை அந்த நாடுகளின் அனுபவங்கள் கற்றுத்தந்துள்ளன," என்று நாடாளுமன்றத் தில் நேற்று அமைச்சர்நிலை அறிக்கையை வாசித்தபோது திரு சண்முகம் சொன்னார். இனம், சமயம் சார்ந்த பிரச்சினைகள் உணர்ச்சிகளைத் தூண்டி, பிரிவினையை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் தங்களது இனமோ சமயமோ தாக்கப்பட்டதாக மக்கள் நினைத்தால் வன்முறை வெடிக்கும் சாத்தியம் அதிகரிக்கும் என்பதையும் அரசாங்கம் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார். வெறுப்பைத் தூண்டும் பேச்சு ஒருவரின் மனஉறுதியைக் குலைப்பதோடு, சமூகத்திலும் ஆழமான பிளவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். வெறுப்புணர்வுப் பிரசாரம் குறித்து தெளிவாக அறிந்து, அதைத் தடை செய்யும் வலுவான சட்டங்களைக் கொண்டு, எல்லா சமூகங்களையும் நியாயமாக நடத்தும்போது தான், அந்நாடு பல சமய, ஒற்றுமையான சமு தாயத்தை உருவாக்க முடியும் என்றார் அவர். தமது உரையின்போது, வெறுப்புணர்வுப் பிரசாரத்தை மற்ற நாடுகள் எதிர்கொண்ட விதம் பற்றியும் அதனால் ஏற்பட்ட விளைவு களையும் அமைச்சர் சுட்டினார். வெறுப்புணர்வுப் பிரசாரத்தைப் பொறுத்த மட்டில், அமெரிக்கா 'உயர்ந்த வரம்பை' கொண்டுள்ளதாக அவர் சொன்னார். அது குறிப்பிட்ட இனங்களை, சமயங் களைச் சிறுமைப்படுத்தும் பேச்சுகளை அனுமதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் சண்முகம்: வெறுப்புணர்வுப் பிரசாரம் கடுமையாக கையாளப்படும்
2 mins read
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் -

