தாய்லாந்தின் பட்டாயா நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கடுமையான பெருவெள்ளம் ஏற்பட்டதை அடுத்து அங்குள்ள இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீர்மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்தது. இந்த வெள்ளம் திடீரென ஏற்பட்டதால் சாலைகளில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மேற்கொண்டு நகர முடியாமல் சிக்கிக்கொண்டதைச் சமூக ஊடகப் படங்கள் சில காட்டுகின்றன.
பாதிக்கப்பட்ட சாலை ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் வெள்ள நீர் வடியத் தொடங்கிய பிறகு வாகனங்களால் நகர முடிந்தது.
கடுமையான மழை இன்று வரை தொடர்ந்து பெய்யும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

