கார் நிறுத்துமிடத்தின் கட்டண நுழைவாயிலை மோதிய 'பிஎம்டபள்யூ' கார், பின்னர் வேறு இரண்டு கார்களை மோதி இறுதியில் காப்பிக் கடையின் சுவற்றில் மோதி நின்றது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 1.40 மணிக்கு புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ புளோக் 265ல் இந்த விபத்து நேர்ந்தது.
ஆயினும், விபத்தில் சம்பந்தப்பட்ட மூன்று ஓட்டுநர்களுக்கும் காப்பிக் கடையிலுள்ள உணவங்காடி ஒருவருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
70 வயது காரோட்டுநர் பிரேக்கை அழுத்துவதாக நினைத்துக்கொண்டு தனது காரைத் தவறுதலாக மிக வேகமாகச் செலுத்தியதால் இது நடந்ததாகக் கூறப்படுகிறது.

